கோவை அருகே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் : அரை குறை ஆடையுடன் இளம்பெண்கள் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2021, 3:36 pm
Gn Mills Prostitute - Updatenews360
Quick Share

கோவை : ஜிஎன்ஸ் மில்ஸ் அருகே மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் அருகே ஜிஎன்மில்ஸ் பகுதியில் சுப்பிரமணியம்பாளையம் உள்ளது. இங்கு அரசு டாஸ்மாக் கடைக்கு அருகே கேரள ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது.

இதில் விபச்சாரம் நடப்பதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மசாஜ் சென்டரில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தீபு மேத்யூ என்ற போலி நிருபர் ஒருவர் விபச்சார தொழில் செய்து வந்தது உறுதியானது. இதையடுத்து அவருடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட்ட சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 32) கார்த்திக் (வயது 30 ) உட்பட 7 பேரை கைது செய்தனர் .

மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மக்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதியில் விபச்சார தொழில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 359

1

0