மாஸ்டர் வெளியீடு : ரசிகர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கிய ரசிகர் பட்டாளம்..!

13 January 2021, 8:42 am
Quick Share

கோவை: நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் சானிடைசர் வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த சூழலில், தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகாத சூழலில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இது அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாது, திரையரங்கு உரிமையாளர்களையும், திரையரங்கு சார்ந்த தொழிலாளர்கள் மத்தியிலும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது விருப்பமான கதாநாயகரின் படம் வெளியானதால் இன்று அதிகாலை முதலே தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் இணைந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தலால் கோவையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் திரையரங்கிற்கு வரும் பொதுமக்களுக்கு நடிகர் விஜயின் ரசிகர்கள் முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் வழங்கினர்.

கோவை மாநகரை பொருத்தவரை 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று மாஸ்டர் திரைப்படம் வெளியானது. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும், விரைவில் தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 4

0

0