இந்த 8 மாவட்ட மக்களே உஷார்: கனமழைக்கு வாய்ப்பு…மீனவர்களுக்கும் அலர்ட்..!!
Author: Aarthi Sivakumar15 October 2021, 10:20 am
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அலர்ட் விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் வேலுார் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும். நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலுார், அரியலுார், பெரம்பலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இந்த பகுதிகளுக்கு 18ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
0
0