மயிலாடுதுறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதை பார்த்ததாக சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், கால் தரத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பின்னர், சிசிடிவி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றது தெரியவந்தது.
மேலும் படிக்க: மத்திய அரசால் வள்ளி கும்மி கலைக்கு உரிய அங்கீகாரம்… கோவையில் கும்மி ஆடி வாக்குசேகரித்த அண்ணாமலை வாக்குறுதி..!!
நேற்று நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீர்காழி வன சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை தேடி வருகின்றனர். தேடி வருகின்றனர். நேற்று இரவு சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை யாராவது கண்டால் 9360889724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Gold and Silver rate ; புதிய உச்சத்தில் தங்கம் விலை… ரூ.52 ஆயிரத்தை எட்டி விற்பனை ; அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!!
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூரைநாடு பகுதியில் செயல்படும் பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அறிவித்துள்ளார்.
வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும் என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.