குளத்தில் கொட்டப்பட்ட 50 மூட்டை ரேஷன் அரிசி… அதிகாரிகளின் அலட்சியமா…? நடவடிக்கை எடுக்கக் கோரும் பொதுமக்கள்…!!
Author: Babu Lakshmanan8 January 2022, 7:11 pm
மயிலாடுதுறை அருகே 50 மூட்டை ரேஷன் அரிசியை மர்ம நபர்கள் குளத்தில் கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் மாரியம்மன் கோயில் குளத்தில் 50க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் கொட்டப்பட்டு மிதந்தபடி இருந்தன. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவற்றை சோதனை செய்து பார்த்ததில் ரேஷன் கடை கடையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் என்பது தெரியவந்தது.
எதற்காக இந்த மூட்டைகள் குளத்தில் கொட்டப்பட்டன, இவற்றை கொட்டி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தெரியவில்லை. இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகளை குளத்தில் கொட்டி சென்ற நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0