திமுக வியூகத்தை உதறித் தள்ளிய வைகோ : சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டி!!

10 October 2020, 11:55 am
Stalin Vaiko - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாகவம் தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என மதிமுக பொதுச்செயாலளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய வைகோ, பதவிகளுக்க வாழவில்லை என்றும் லட்சியத்திற்காக வாழ்கிறேன் என்று என்னுடைய தொண்டர்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

ஒரு சில பத்திரிகைகள் தன்னை பற்றி நஞ்சை கக்குகின்றன, ஆனால் அதில் துளி அளவும் உண்மையில்லை என கூறியுள்ளார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் தெரிவித்த அவர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்ட தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடும் என்ற தகவல் வெளியான நிலையில் மதிமுக அதில் இருந்து பின்வாங்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உருவெடுப்பார்''- வைகோ உறுதி | Dmk  Chief Mk Stalin Will Determine Prime Minister Said Mdmk Chief Vaiko - NDTV  Tamil


தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடதக்கது.

நண்பனே இனி இனம் பார்த்து பழகு.. களம் பார்த்து கால் வை.. இது துரைமுருகன்  அட்வைஸ்.. யாருக்கு தெரியுமோ? | Durai MUrugan advises Vaiko - Tamil Oneindia

ஏற்கனவே தேர்தல் வரும் சமயத்தில் இங்குள்ளவர்கள் அங்கு செல்வார்கள், அங்குள்ளவர்கள் இங்கு வருவார்கள் என்பது தெரியும் என திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருமையாக பேசியதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது கூட்டணி கட்சிகள் கோபத்தில் உள்ளனர்.

Views: - 61

0

0