எண்டோஸ்கோப்பி சிகிச்சை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…!!
Author: Aarthi Sivakumar29 October 2021, 10:00 am
சென்னை: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் குடலிறக்கம் பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியம் அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. மேலும், இது சாதாரண மருத்துவ பரிசோதனை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views: - 460
0
0