மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை..

7 November 2020, 12:02 pm
Medical Student Suicide - Updatenews360
Quick Share

புதுச்சேரி : சென்னையை சேர்ந்த இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவருடைய மகள் சிரிஷா (வயது 22) தன் தாய் வசந்தா உடன் புதுச்சேரியில் வீடு எடுத்து தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டின் அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை குறித்து சிரிஷாவின் தாயார் அளித்த தகவலை அடுத்து திருபுனை போலிசார் சிரிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சிரிஷா கடந்த சில நாட்களாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதனால் வர இருக்கும் தேர்வை எழுத பயந்து சிரிஷா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவருகின்றது.

Views: - 14

0

0