திரையரங்குகள் திறப்பது மருத்துவர் குழு கையில் உள்ளது : அமைச்சர் கடம்பூர் ராஜு

11 September 2020, 4:25 pm
Tuticorin Minister - updatenews360
Quick Share

தூத்துக்குடி : மருத்துவ குழுவின் அறிக்கை பெற்ற பின்னர் திரையரங்கு திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதனை தொடர்ந்து சத்திரப்பட்டி , இடைச்செவல் கிராமங்களில் ரூ 17 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் , முடுக்குமீண்டான் பட்டி கிராமத்தில் வாறுகால் அமைக்கும் பணி ஆகி வெற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இனாம்மணியாச்சி புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் கடம்பூர் செ ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆட்சியாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு இருமொழிக் கொள்கை தான் அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,மொழி பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது மக்களுக்கு தெரியும்.

டீ சர்ட் ட்ரெண்டிங் மூலமாக திமுக உண்மையை மறைக்க பார்ப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.மொழி தொடர்பான கொள்கை மற்றும் அதன் நிலைப்பாட்டில் திமுகவினர் எந்த அளவில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். எங்கள் கொள்கைகள் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றார்.

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்.திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு 8ம் தேதி தான் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதுவரை அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அனுப்பவில்லை,மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் சொன்னாலும் இங்குள்ள நிலைமைகளை அறிந்து, அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரை துறையினருக்கு போஸ்ட் புரோடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது,75 பேருடன் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டார்கள் அதற்கும் அரசு அனுமதி வழங்கியது,சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அரசு அனுமதி வழங்கியது.

கொரோனா ஊரடங்கு போது திரைப்பட நலவாரியத்தில் பதிவு செய்திருந்த 27ஆயிரத்து 850 பேருக்கு ரூ2000 நிதியுதவி அளிக்கப்பட்டது. திரையரங்கு திறக்கப்படும் போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கஷ்டம் ஏற்படும், ஒவ்வொரு வாரமும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படிமருத்துவ குழுவின் அறிக்கை பெற்ற பின்னர் திரையரங்கு திறப்பது பற்றி உரிய நேரத்தில் முதல்வர் முடிவு எடுப்பார் என்றார்.

Views: - 0

0

0