மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் : காணொலி வாயிலாக கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2021, 1:08 pm
Medicine to Home - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார். இதன் மூலமாக தொற்றா நோய்களான ரத்த அழுத்தம் , சர்க்கரை ஆகியவற்றுக்கு தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ளும் நோயளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 75 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைகள் மூலம் சர்க்கரை , ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெற்று வருகின்றனர். தற்போது , கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று மருந்துகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன .

இவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு எளிதில் தொற்றிக்கொள்ள கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்த திட்டத்தின்படி, , மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை , அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெறுபவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்படும்.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் நோயாளிகள் பயன்பெறுவர். நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் , ஊரகப் பகுதியில் ஆனைமலை வட்டாரம் , ஆழியாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் வாகனங்களை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இந்த வாகனங்களில் நோயாளிக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும் . அதனுடன் எந்தெந்த மருந்துகளை எந்த வேளையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிக்கட்டி அட்டையும் வைக்கப்பட்டிருக்கும் . இரண்டு மாதங்களுக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்து மீண்டும் மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .

Views: - 322

1

0