3 வருடமாக தொல்லை… சுஷாந்த் சிங் முடிவை கையில் எடுத்த மீரா மிதுன் : சென்னை போலீசாரின் சாமர்த்தியம்..!!

18 June 2021, 12:37 pm
Quick Share

தமிழகத்தின் சூப்பர் மாடல் எனக் கூறிக் கொள்ளும் நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல்வேறு படங்களில் நடித்ததுடன், அடிக்கடி கிளாமர் போட்டோசூட்களை நடித்து சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆவார். அதோடு, அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களை கூறி, கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீரா மிதுன் எதிர்கொள்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

இந்த நிலையில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு, மீரா மிதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்தப் பதில், 3 ஆண்டுகளாக ஒரு அமைப்பிற்கு பணியாற்றி விட்டு, அதில் இருந்து விலகிவிட்டதாகவும், அந்த அமைப்பைச் சேர்ந்த அஜித் ரவி என்பவர் மூலம் தொடர்ந்து தொல்லைகளை எதிர் கொண்டு வந்ததாகவும், இது தொடர்பாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

எனவே, தற்கொலைதான் எனக்கு இருக்கும் ஒரே முடிவு எனவும், சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அவரை தண்டிக்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டு தமிழக முதல்வரையும் பிரதமர் மோடியையும் ட்விட்டர் பதிவில் டேக் செய்துள்ளார்.

இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், புகார் அளித்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை பதிலளித்திருந்தது. இதற்கு, மிகத் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன் என மீரா மிதுன் பதிலளித்துள்ளார்.

Views: - 365

0

0