போலீசாருக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடிக்கும் மீராமிதுன் : ஆண் நண்பரையும் கைது செய்து தீவிர விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 2:08 pm
Meera mithun Boy- Updatenews360
Quick Share

சென்னை : கேரளாவில் கைதாகி சென்னை அழைத்து வரப்பட்ட மீராமிதுன் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனை சென்னை அழைத்துவரப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டியலினத்தோரை இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். அங்கு நெருங்கிய ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்தாக தகவல் கிடைத்ததை அடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீசார் நேரடியாக சென்று கைது செய்தனர்.

கைது நடவடிக்கையில் இறங்கிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீரா மிதுன், தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம் செய்வதாகவும், காவல்துறை என் மீது கை வைத்தால் நான் கத்தியால் குத்திக்கிட்டு செத்து போய்டுவேன் என ஒரு பரபரப்பான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டியிருந்தார்.

இந்த நிலையில் கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர் செய்து (TRANSIT WARRANT) பெற்றுக் கொண்டு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரை அடுத்து நடிகை மீது பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பி தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை அழைத்து வரப்பட்ட மீராமிதுனை தொடர்ந்து அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் கைது செய்தனர். அப்போது தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் கொடுமை படுத்துவதாகவும், உணவு கொடுக்கவில்லை என மீராமிதுன் சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். தன்னுடைய வழக்கறிஞர் வந்தால்தான் பேசுவேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Views: - 400

4

1