இபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி : அடித்து சொல்லும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 2:26 pm
SP Velumani - Updatenews360
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் EPS தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும், 40 தொகுதிகளிலும் , சட்டமன்றத்தில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் ஹஜ்ரத் நூர்ஷா அவுலிநா தர்காவில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மீண்டும் அமைந்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் அவைதலைவர் தமிழ்மகன் உசேன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், கேர்.ஆர் ஜெயராம் பங்கேற்றனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டி பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்றும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியும் , சட்டமன்றத்தில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம் என பேட்டி அளித்தார்.

தமிழ் மகன் உசேன் அளித்த பேட்டியில், எடப்பாடியார் அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளராக வேண்டியும், வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில் , மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும் என 75 மாவட்டங்களில் 70 தர்காகளில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளேன்.

39 வது மாவட்டமாக கோவை மாவட்டம் வந்துள்ளேன். மிக அதிகமான கழக தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த பிராத்தனை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும்.

தமிழகத்தின் அதிமுகவின் முதல் மாவட்ட அமைப்பாளர் நான்தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓரே இயக்கம் அதிமுக எனவும் உலமாக்களுக்கு ஒய்வூதியம் வழங்கிய கட்சி அதிமுக என்றார். ரமலான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகியவற்றிக்கும் மெக்கா மதினா செல்லவும் , இஸ்லாமியர் வேலை வாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அதிமுக செய்து இருக்கின்றது.

கோவைக்கு திமுக ஆட்சியில் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமறை, வன்முறை, பாலியல் வன்முறை என நடக்கிறது.

கோவை சாலைகள் குளங்களை போல காட்சியளிக்கின்றது. அதிமுக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கேடயம். 21 ஆண்டுகள் இப்தார் நோம்பை நடத்தியவர் ஜெயலலிதா எனவும் இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு மதம், சாதி கிடையாது. பாபுஜி சாமிகள் நமக்கு சித்தப்பாதான். துவா நிகழ்வில் பாபுஜி சாமிகள் கலந்து இருக்கின்றனர் என தெரிவித்தனர்.

Views: - 334

0

0