தருமபுரி ; வசியம் செய்ய சென்ற இடத்தில் காதலியை பலாத்காரம் செய்த மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து, முகத்தை சிதைத்து காதலன் பழிக்கு பழி வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தினேஷ் வயது (28). தினேஷின் தந்தை கோவிந்தராஜும், ஓசூர் கலவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். நீண்ட நாள் நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
தனது தந்தையின் நண்பர் என்ற முறையில் சசிகுமாருக்கும் தினேஷுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. கலவரப்பள்ளி சசிகுமார் மாந்திரீகம் செய்யும் வேலையையும் செய்து வந்துள்ளார். பிடித்த பெண்களை வசியம் செய்து, அவர்களுக்கு திருமணம் நடத்திக் கொடுக்க தன்னால் முடியும் என பலரையும் ஏமாற்றி மாந்திரீக பணி செய்து வந்துள்ளார்.
இதனை அறிந்த தினேஷ் தனது நீண்ட நாள் தோழியை காதலியாக மாற்றி, திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்க வைக்க வேண்டும் என சசிகுமாரை நாடி உள்ளார். இதனைத் தொடர்ந்து, தினேஷ் தனது தோழியை அழைத்து வந்து சசிகுமாரிடம் மாந்திரீகம் செய்ய சொல்லி உள்ளார். மாந்திரீகம் செய்யும் பொழுது அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரும் உடன் இருக்கக்கூடாது, ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் என சொல்லி தினேஷை வெளியே அனுப்பி உள்ளார் மந்திரவாதி சசிகுமார்.
அதனை நம்பி தினேஷ் அவர்களை தனியாக விட்டு விட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்று காதலிக்காக காத்திருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மந்திரவாதி சசிகுமாரிடம் இருந்து வெளியே வரும்பொழுது, தனது காதலி அழுதபடி வந்துள்ளார். அங்கே தன்னை சசிகுமார் பலாத்காரம் செய்துவிட்டதாக தினேஷிடம் கூறி கதறி அழுதததாகக் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் தனது உள்ளூர் நண்பரான குணாளன் மற்றும் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நண்பருடன் இணைந்து, மந்திரவாதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
15 நாள் காத்திருப்பதற்குப் பின்பு கடந்த 4ம் தேதி, தனது பென்னாகரம் நண்பருக்கும், அவரது காதலியுடன் சேர்த்து வைக்க மாந்திரீகம் செய்ய வேண்டும் எனக் கூறி சசிகுமாரை நைசாக பென்னாகரம் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அங்குள்ள வனப்பகுதியில் மது அருந்தலாம் என ஆசை வார்த்தை கூறி வனப்பகுதியில் மது ஊற்றிக் கொடுத்துள்ளனர். அதிக மது போதையில் இருந்த சசிகுமாரை, கல்லால் தாக்கி, படுகாயம் அடைய செய்துள்ளனர்.
தொடர்ந்து மயக்கத்தில் இருந்த தனது காதலியின் கற்பை சீரழித்த மந்திரவாதி சசிகுமாரின் ஆடைகளைக் களைந்து, ஆணுறுப்பையும் கதற கதற அறுத்தெறிந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, சசிகுமார் இறந்ததை உறுதி செய்துவிட்டு, பெரிய கற்களை தூக்கி மந்திரவாதி சசிகுமாரின் தலையில் போட்டு, முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்நிலையில், இன்று ஓசூர் அட்கோ காவல்நிலையத்தில் சசிகுமாரின் மனைவி சுஜாதா தனது கணவரை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும், தனது கணவருடன் பணியாற்றும் கோவிந்தராஜின் மகன் தினேஷ் என்பவர் போன் மூலம் அழைத்ததின் பேரில் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து சுஜாதா பென்னாகரம் தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அடையாளம் தெரியாமல் முகம் சிதைந்து, இறந்து கிடந்த பிரேதத்தை அடையாளம் காட்ட பணித்தனர். தனது கணவர் என்பதை அவர் உறுதி செய்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக தினேஷ் மற்றும் அவரது நண்பர் குணாளன் ஆகியோர் பென்னாகரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பென்னாகரம் பகுதியில் இருந்த தினேஷின் மற்றொரு நண்பரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.