அம்ரித் மகோத்சவ் நினைவு பரிசு: மேஜர் சரவணன் குடும்பத்தாரிடம் பரிசு வழங்கி கௌரவிப்பு..!!

Author: Rajesh
8 April 2022, 7:26 pm
Quick Share

திருச்சி: பாரத பிரதமரின் அம்ரித் மகோத்சவ் நினைவு பரிசு ராணுவ அதிகாரிகள் மேஜர் சரவணன் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் அம்ரித் மகோத்சவ் பெயரில் நாடு முழுவதும்
75 இடங்களில் 75வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக நடைபெற்ற போர்களில் இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு பாரத பிரதமரின் நினைவு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் நாட்டிற்காக தன்னுயிர் நீத்த முதல் ராணுவ அதிகாரியான திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று மாலை திருச்சி பெட்டாலியன் என்சிசி 2 கமாண்டிங் ஆபீஸர் ராம்நேக் கௌசாமி மற்றும் திருச்சி ஜோசப் கல்லூரி அசோசியேட் என்சிசி ஆபிஸர் அர்ம்ஸ்டராங் ஆகியோர் பாரத பிரதமரின் நினைவு பரிசை மேஜர் சரவணனின் சகோதரியான டாக்டர் சித்ரா செந்தில்குமாரிடம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மேஜர் சரவணன் திருவுருவப் படத்திற்கு புனித வளனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Views: - 749

0

0