கே.பி.ஆர் மற்றும் ரூட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

10 July 2021, 7:09 pm
Quick Share

கோவை: கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ரூட்ஸ் நிறுவனத்திற்கு இடையே மாணவர்கள் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பம் கையெழுத்தாகியுள்ளது.

கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், ரூட்ஸ் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் மேலாண்மைத் துறை பொது மேலாளர் சம்பத்குமார் கே.பி.ஆர் கல்லூரியின் முதல்வர் மு.அகிலா கல்லூரியின் முதன்மைச் செயலர் நடராஜன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் ரூட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், “இதன் மூலம் கே.பி.ஆர் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரூட்ஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறவு முடியும், மேலும் அங்குள்ள தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், மேலும் அவர்களின் தேவைகளைக் கண்டு அதற்கான தீர்வு காண ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் முடியும். மேலும், தொழில் தொழில்துறையின் தேவையை அறிந்து அதற்கேற்ப மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும். புதிய பாடத்திட்டங்களை வகுக்கவும் முடியும்.” என்றார்.

Views: - 113

0

0