மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு முடி திருத்தம் செய்து இல்லத்தில் சேர்த்த காவல்துறை!!

23 August 2020, 8:13 pm
Cbe Mentalli Ill- Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே மனநிலை பாதிக்கப்பட்டவரை மீட்ட போலீசார் காப்பகத்தில் விட்டனர்.

காரமடை அருகே பில்லூர் அணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரளி மின்சார வாரிய குடியிருப்பு பகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். பரளி மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக இருந்து வந்த பிரகாஷ் என்பவர் அவரை காரமடை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்துள்ளார்.

அதன்பின்னர் காரமடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த மீரா நாத் விகல் (வயது 45) என தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்து கொண்ட காவலர்கள், பின்னர் அவருக்கு முடி திருத்தம் மற்றும் முகசவரம் செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் உதவி நாகராஜ் ஆகியோரின் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் விடப்பட்டார்.

Views: - 28

0

0