கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சாப்பிட என்ன மெனு தெரியுமா?

26 March 2020, 10:50 pm
corona menu updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த, நோய் எதிர்ப்புசக்தி தரக்கூடிய உணவுகள் வழங்கப்படுகிறன.

இந்தியாவை தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. சென்னையை பொருத்தவரை, கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டவர்கள், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களும், அறிகுறியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் வகையிலான உணவை வழங்கப்படுகிறது.

அதன்படி, காலையில், இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சையை வெந்நீரில் கொதிக்க வைத்து தரப்படுகிறது. 8.30 மணியளவில்  இரண்டு இட்லி, சாம்பார்; அல்லது சம்பா ரவை கோதுமை உப்மா, 2 வேகவைத்த முட்டை, பால் தரப்படுகிறது.

பகல் 11 மணியளவில் சாத்துக்குடி ஜூஸ்; பகல் 1 மணிக்கு இரண்டு சப்பாத்தி, புதினா சாதம் ; வேகவைத்த காய்கறிகள் அல்லது ஒரு கப் கீரை; மிளகு ரசம் தரப்படுகிறது.

பிற்பகல் 3 மணியளவில் மிளகு தண்ணீர்; மாலை 4 மணிக்கு ஏதேனும் ஒரு சுண்டல்; இரவு 7 மணிக்கு இரண்டு 2 சப்பாத்தி, வெங்காய சட்னி, இட்லி அல்லது சம்பா ரவை கோதுமை தரப்படுவதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply