இராமகோபாலன் மறைவிற்கு வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

By: Udayachandran
1 October 2020, 2:41 pm
Shop Closed - updatenews360
Quick Share

ஈரோடு : இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவிற்கு சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகரில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது.

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உடல் நலம் குன்றி நேற்று உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலத்தில் உள்ள இந்து முன்னணி அமைப்பினர் இன்று ஒரு நாள் முழு கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதே போல் புன்செய்புளியம்பட்டியில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பவானிசாகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Views: - 42

0

0