சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் சேவை நேரம் நீட்டிப்பு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!

7 November 2020, 4:21 pm
Metro Train- updatenews360
Quick Share

சென்னை: நாளை முதல் மெட்ரோ ரெயிலின் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரெயிலின் சேவை நேரம் நீட்டிக்கப்படுவது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தற்போது காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், பணியாளர்கள், மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் நீட்டிக்கப்படுகின்றன. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 05.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை உச்ச மணி நேரம் இல்லாமல் இயங்கப்படும்.

மேலும் பயணிகள், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ஒத்துழைக்குமாறு மெட்ரோ நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 8

0

0