தொடர் கனமழையால் 100 அடியை எட்டவிருக்கும் மேட்டூர் அணை..! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!

13 August 2020, 12:53 pm
Mettur Dam- updatenews360
Quick Share

சேலம் : தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டவிருப்பதால், டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், கா்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழியத் தொடங்கின. அதிகபட்சமாக வினாடிக்கு 1.50 லட்சம் வரையில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால், பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன்மூலம், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை நெருங்கியுள்ளது. மேலும், பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் விவசாயத்தை நம்பி உள்ள நிலையில், அவர்களுக்கு ஏதுவாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 38

0

0