நிரம்பும் கபினி, கேஆர்எஸ் அணைகள்…! மேட்டூர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி
8 August 2020, 2:05 pmசேலம்: தொடர் மழையால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக உயா்ந்து இருக்கிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஆகையால் கா்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பும் நிலையில் இருக்கின்றன.
கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் நீா் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 60,000 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைகளின் உபரிநீரும் மேட்டூர் அணைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
நீா்வரத்து அதிகரிப்பாதால், அணையின் நீா்மட்டம் 67.97 அடியாக உயா்ந்தது. இந் நிலையில், இன்றைய நிலவரப்படி, வரும் நீா்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 70.05 அடியாக இருக்கிறது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 32.74 டி.எம்.சி. நீர் இருப்பில் இருக்கிறது.