கர்நாடகாவில் கனமழை எதிரொலி…! மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

7 August 2020, 10:15 am
Mettur Dam- updatenews360
Quick Share

மேட்டூர்: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

இந் நிலையில் 2 அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. தண்ணீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரி கரையோரங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆகையால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருவாய்துறையினர், போலீசார் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கு நீர் திறக்கப்பட்டு உள்ளது. அணை நீர்மட்டம் 65.44 அடியாகவும், நீர்இருப்பு 28.99 டி.எம்.சி.யாகவும் உள்ளது. பாசன தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Views: - 24

0

0