தொடரும் தென்மேற்கு பருவமழை…! கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்

7 August 2020, 7:10 pm
Mettur Dam- updatenews360
Quick Share

சேலம்: கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவின் வயநாட்டிலும் கன மழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கபினியில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது.

ஆகையால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. அணைக்கு நேற்று 6,000 கன அடி  நீர்வரத்து இருந்தது. இன்று காலை 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி 65.55 அடியாக உயர்ந்து, அணையின் நீர்மட்டம் 1.35 அடியாக காணப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 3,000 கன அடி நீர்  திறக்கப்படுகிறது. நீரின் இருப்பு 28.99 டிஎம்சியாக இருக்கிறது.

Views: - 8

0

0