மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு: நீர்மட்டம் 105.97 அடியை எட்டியது

24 January 2021, 2:52 pm
metur dam - updatenews360
Quick Share

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட நீர் திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணையை வந்தடைகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1206 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1356 கன அடியாக அதிகரித்தது. இன்று குறைந்து விநாடிக்கு 1351 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.


நீர்வரத்தை விட நீர் திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 105.92 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 105.96 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 105.97 அடியாக அதிகரித்தது. இனி வரும் நாட்களில் இதேபோல் தண்ணீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.