தமிழக அரசு சார்பாக நாளை எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : எம்பிக்கள், அமைச்சர்கள் மரியாதை செலுத்துவர் என அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2022, 11:37 am
Mgr Stalin - Updatenews360
Quick Share

சென்னை : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில்,எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி,சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,எம்.ஜி.ஆர்.மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,நாளை ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 217

0

0