அதிமுக சார்பில் கோவையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா : முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி அறிவிப்பு…

Author: kavin kumar
13 January 2022, 9:12 pm
Quick Share

கோவை: அதிமுக சார்பில் கோவையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க வருகிற 17-ஆம் தேதி பாரத ரத்னா எம்ஜிஆர் 105 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பகுதியில் பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில், உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் விதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 278

0

0