வாய் மட்டும் அசையுது.. சத்தத்தை காணோம்.. வேலை செய்யாத மைக் : கடுப்பாகி சத்தம் போட்ட அமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 9:52 pm
Raja Kannappan - Updatenews360
Quick Share

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொழுந்துரை கிராமத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாமினை முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பன் துவக்கி வைத்தார்.

அப்போது கட்சி நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் பொதுமக்களிடம் பேசுவதற்காக மைக்கை எடுத்தார்.

அப்போது தான் பேசுவது தனக்கு மட்டும் தான் கேட்கிறது வெளியே கேட்கவில்லை என மைக்கை தட்டி பார்த்தார்.

விழா ஏற்பாடுகள் அனைத்தும் நன்றாக செய்தீர்கள் ஆனால் மைக்கை கோட்டை விட்டுரீர்கள் இப்படியா பண்ணுவது கண் மாதிரி பேச வேண்டாமா சத்தமே வரலையே நான் பேசுவது மட்டும் தான் கேக்குது என்னப்பா எனவிழா மேடையில் கடுப்பாகிவிட்டார்.

பிறகு நீண்ட நேரம் போராடி ஒரு வழியாக மைக் செட் ஊழியர் மைக்கை சரி செய்து அமைச்சரிடம் கொடுத்து விட்டார். பிறகு மக்களிடம் உரையாற்றினார்.

அதன் பின் உரையை முடித்துக் கொண்டு அடுத்த முறை நல்ல மைக்கா ரெடி பண்ணி வச்சிருங்க என கட்சி நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டு இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாமை துவங்கி வைத்தார்.

அதன் பின்பு அமைச்சர் வெளியே வரும் பொழுது அக்கிராம பெண்கள் அமைச்சரை சூழ்ந்து கொண்டு எங்கள் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது தண்ணீருக்கு நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் தண்ணீர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் கொஞ்சம் சிரமம் மூன்று மாதம் வரை கஷ்டப்படுங்கள்.

அதன் பிறகு அனைத்து தெருக்களுக்கும் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கனெக்சன் கொடுக்கப்படும் என கூறினார்.

Views: - 352

0

0