குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்!!

9 September 2020, 2:38 pm
Mtp Butterflies - updatenews360
Quick Share

கோவை : காரமடையில் தீவிரமடையும் பருவமழையால் மலைப் பகுதியிலிருந்து சமதள பரப்பை நோக்கி வண்ணத்துப்பூச்சிகள் படையெடுத்துள்ளது.

கோவை மாவட்டம் காரமடை மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது

குறிப்பாக காரமடை மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறப் மலை அடிவார பகுதிகளான தோலம்பாளையம் வெள்ளியங்காடு ஆதிமதியனூர் தாயனூர் தேக்கம்பட்டி போன்ற இடங்களில் தற்போது பருவமழை காரணமாக ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் மலைப்பகுதிகளில் இருந்து தற்போது இடம் பெயர்வது விளை நிலங்களுக்குள் அதிகரித்து காணப்படுகிறது.

பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் இடப்பெயர்ச்சி என்பது பருவமழைக்கு முன்னரும் பருவமழைக்கு பின்னரும் என்ற கால நிலையைக் காட்டுவதாக இருக்கும் தற்போது பருவமழை நல்லமுறையில் பெய்து வருவதால் வண்ணத்துப்பூச்சிகள் காடுகளிலிருந்து சமதளத்தை நோக்கி தற்போது கூட்டம் கூட்டமாக வரத் துவங்கியுள்ளது

பல வண்ண நிறங்களில் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் படையெடுக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களது இடங்களை மாற்றி அமைத்துக் கொள்வதால் இந்த இடப்பெயர்ச்சி நிகழ்வு ஒவ்வொரு பருவ மழை காலங்களிலும் ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

அதேசமயத்தில் இயற்கையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய இந்த பட்டாம்பூச்சிகள் சரியான நேரங்களில் தங்கள் இடப்பெயர்ச்சி நிகழ்த்துவதால்இயற்கை சமநிலை படுவதுடன் விவசாய விளை நிலங்களில் மகரந்த சேர்க்கை போன்ற விஷயங்களுக்கும் இது அடித்தளமாக அமையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0