மீண்டும் பால் விலை உயர்வு… லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2023, 6:16 pm
Milk Rate High - Updatenews360
Quick Share

பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு நிறுவனமான பான்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்தது .

இந்த நிலையில் தற்போது விற்பனை விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 42 ரூபாயிலிருந்து 46 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதேபோல பல்வேறு ரகங்களின் பாலின் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது.

Views: - 932

0

0