ஆவினில் பால் விலை குறைப்பு: இன்று முதல் அமல்..!!

16 May 2021, 10:11 am
Aavin milk updatenews360
Quick Share

சென்னை: இன்று முதல் ஆவினில் பால் விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 1 லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. முதல்வர் அறிவித்தபடி இன்று முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ரூ.23க்கு விற்ற பசும்பால் 500 மில்லி விலை தற்போது ரூ.21.50. ரூ.12-க்கு விற்ற பசு ம்பால் 250 மில்லி தற்போது ரூ. 11. ரூ.24-க்கு விற்ற எஸ்எம் 500 மில்லி தற்போது ரூ.22.50. ஆவின் கோல்டு 500 மில்லி ரூ.25க்கு விற்றது தற்போது ரூ.23.50. ஆவின் கோல்டு 200 மில்லி ரூ. 10, புதிய விலை ரூ.9.50. ஃபுல் கிரீம் 500 மில்லி ரூ.26-க்கு விற்றது ரூ.24.50. டீமேட் 1000 மில்லி ரூ.55, புதிய விலை ரூ.52. பசும்பால் தயிர் 500 மில்லி ரூ.22.60, புதிய விலை ரூ.21.

எஸ்எம் தயிர் 500 மில்லி ரூ.23.60, புதிய விலை ரூ.22. பொதுமக்கள் அனைவரும் விலைக்குறைப்பு செய்யப்பட்ட ஆவின் பாலை வாங்கி பயன் பெறலாம்.

தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளூர் விற்பனையாக 6 ஆயிரம் லிட்டர் விற்கப்படுகிறது.

நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்ட ருக்கு அதிகபட்ச சில்லறை விலை ரூ.48-ல் இருந்து ரூ.45 ஆகவும், ஆவின் பசும்பால் ரூ.46-ல் இருந்து ரூ.43 ஆகவும், ஆவின் கோல்டு பால் ரூ.50ல் இருந்து ரூ. 47 ஆகவும், நிறைகொழுப்பு பால் ரூ.51ல் இருந்து ரூ.48 ஆகவும் விற்பனை செய்யப்படும் என தேனி ஆவின் பொது மேலாளர் டிஆர்.தியானேஷ்பாபு தெரி வித்துள்ளார்.

Views: - 92

0

0