மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி : உற்சாகப்படுத்த சிறுவர்களுடன் ஓடிய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 12:10 pm
Officials in Marathon -Updatenews360
Quick Share

விழுப்புரம் : மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து சிறுவர்களுடன் மூன்று கிலோமீட்டர் தூரம் ஒடி உற்சாகப்படுத்தினார்.

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் 75வது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்த மினி மாரத்தான் போட்டியில் சுமார் 300க்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டன. போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் ஓடிய போது சிறுவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சிறுவர்களுடன் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்

Views: - 677

0

0