மினி லாரி கவிழ்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

Author: Udhayakumar Raman
17 October 2021, 10:23 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் காந்தி நகரிலிருந்து திருச்சி மாவட்டம் கீழஅரசூர் கிராமத்திற்கு இன்று விவசாய பணிக்காக 30க்கும் மேற்பட்ட பெண்கள் டாடாஏசி வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலை முடிந்து டாடாஏசி வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கும் போது ஒட்டுனரின் கட்டுபாட்டை இழந்த வாகனம் சாலை ஒரத்தில் கவிழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைத்தனர். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வெங்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 215

0

0