ஜவுளித்தொழில் சங்கங்களுடன் அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஆலோசனை

Author: Udhayakumar Raman
29 June 2021, 9:44 pm
Quick Share

கோவை: கோவையில் தென்னிந்திய பஞ்சாலைக் கழகம் மற்றும் துணிநூல் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்களும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் தமிழக அரசு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்காதது கடைமட்ட தொழிலாளர்கள் வரையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல்வேறு தொழிற்சங்கங்களும் தமிழக அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கோவையை பொறுத்தவரையில் சிறு,குறு மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தி மற்றும் ஜவுளி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இந்த சூழலில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இன்று கோவை வந்தார்.

தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்னிந்திய பஞ்சாலைக் கழகம் மற்றும் துணிநூல் தொழில் நிறுவனத்தினருடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு கொரோனா ஊரடங்கால் பாதிக்கபட்ட தங்கள் தொழிலுக்கி சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், வருவாய் அலுவலர் மற்றும் ஜவுளித்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 212

0

0