நரிக்குறவர் பட்டியலில் இருந்து குறவர் இன மக்களை நீக்க நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் உறுதி…!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 11:56 am
Quick Share

வேலூர் : நரிக்குறவர் பட்டியலில் இருந்து குறவர் இன மக்களை நீக்கி, தனி பிரிவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சஞ்சீவிராயபுரத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் திமுக பொதுசெயலாளரும், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஒன்றிய குழுதலைவர் வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது :- குறவர் இன மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அவர்களை நரிக்குறவர் பட்டியலில் சேர்த்துள்ளனர். அவர்களை தனியாக பிரிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து தமிழக முதல்வரிடம் பேசி நரிக்குறவர் பட்டியலில் இருந்து பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பகுதி பொதுமக்கள் குடிநீர் பிரச்சணை சாலை பிரச்சனை காரிய மேடை, கழிவு நீர் கால்வாய்கள், தெருவிளக்குகள் வேண்டுமென ஐந்து கோரிக்கைகள் வைத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும், எனக் கூறினார்.

Views: - 850

0

0