அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம் : 63 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதை!!

1 November 2020, 5:56 pm
Duraikannu - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அவரது மறைவைக் கேட்ட முதலமைச்சர் பழனிசாமி, மருத்துவமனைக்கு நேரில் வந்து அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பலரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே உள்ள ராஜகிரிக்கு புறப்பட்டது. பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

இதையடுத்து தஞ்சை ராஜகிரியில் உள்ள அமைச்சருக்கு சொந்தமான தோட்டத்தில் 63 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அமைச்சரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Views: - 40

0

0