திண்டுக்கல் : சுயலாபத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக அறிவித்திருந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளான இன்று திண்டுக்கல் அருகே உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டி வரும் இடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பார்வையிட்டார்.
மேலும் வனத் துறை சார்பாக ஏற்பாடு செய்த மரக்கன்றுகளையும் நட்டு வைத்த அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் வனத்துறையால் 2 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
மேலும் தமிழக பாஜக தலைவர் சுயலாபத்திற்காக மத்திய அரசு மூலம் பதவிகளை எதிர்பார்த்து தற்போது தமிழக அரசு மீது குற்றம் சாட்டி அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறி வருகிறார்.
புலி வருது புலி வருது என்று என்று கூறி பூனை கூட வராது தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் தமிழக மக்களை யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை முதலில் தனது முதுகை அவர் பார்க்க வேண்டும் மத்திய அரசு கூறிய எந்த திட்டமும் தற்போது வரை இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு சென்றடையவில்லை.
அதேபோல் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை கூட மீண்டும் பிடுங்கியது மத்திய அரசு. அதேபோல் ஒருவர் ஊழல் செய்திருந்தால் அவரை தண்டிப்பதற்கு நீதிமன்றம் உள்ளது அதே போல் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும்.
தமிழக முதல்வர் தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் என்று சொல்லவில்லை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவ மாணவியரின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.
மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தமிழகத்தில் எத்தனை நபர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்? தற்போது கூட மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் மத்திய அரசு பல பணிகளுக்கு பணியாளர்களை அமர்த்தி உள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து சுமார் 15 நபர்கள் மட்டுமே பணிக்கு சென்றுள்ளனர்.
தமிழகத்தை குறைகூறும் அண்ணாமலை முதலில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு சேர்ந்து விட்டதா? அதேபோல் தேர்தல் சமயத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மக்கள் எத்தனை பேர் மத்திய அரசுப் பணிக்கு தற்போது சென்று வருகிறார்கள். தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாது. ஆகவே சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழக முதல்வரையும் தமிழகத்தின் ஆட்சியும் குறைகூறும் அண்ணாமலை முதலில் அவரது முதுகை பார்க்கட்டும் என கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.