காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, “திமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ. ஆனால் திமுகவினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நடிகர்களை ரசிக்கலாம், அதோடு வந்துவிட வேண்டும்.
முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது எம் ஜி ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது” என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தகுதி இல்லை. மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?. உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நாகூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.