மாயமான மீனவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார் உறுதி..!

14 September 2020, 2:33 pm
Jayakumar 02 updatenews360
Quick Share

சென்னை : மீன்பிடிக்கச் சென்ற போது மாயமான மீனவர்கள் அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும், அவர்களை விரைவில் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை மாதம் மீன்பிடிக்க சென்றவர்கள் 9 மீனவர்கள் மாயமானர். தொடர்ந்து தேடுதல் முயற்சி மேற்கொண்டு, மத்திய அரசிற்கும் அழுத்தம் கொடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். எஞ்சின் கோளாறு காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாக அண்டை நாட்டில் மீனவர்கள் தஞ்சம் அடைவது வழக்கம்.

அந்த வகையில் மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு மீனவர்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பர்மா, மியன்மார் நாடுகளில் தொடர்பு கொண்ட போது, மீனவர்கள் அங்கு பத்திரமாக இருப்பதாக உறுதி தகவல் தெரிவித்தனர். அதேபோல் மீனவர்கள், அவர்களின் படகுகள் ஆகிய புகைப்படத்தை அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் நம் மீனவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் பத்திரமாக நம் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விரைவாக 1 வாரத்தில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரத்தை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

Views: - 7

0

0