சசிகலாவுக்கு NO…. புதிய கட்சிகளுக்கு YES…. அதிமுக நிலைப்பாடு குறித்து அமைச்சர் ஜெயகுமார் பேட்டி..!!

30 January 2021, 1:27 pm
Minister Jayakumar -Updatenews360
Quick Share

சென்னை : சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அதிமுகவை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது. அப்படிபட்ட எஃகு கோட்டை. சசிகலா விவகாரத்தில் ஏற்கனவே தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவையும், அவரைச் சேர்ந்தவர்களையும் அதிமுகவில் சேர்க்கப்படாது என்று. அவர்கள் இல்லாமல் அதிமுக ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது.

சசிகலாவை அதிமுகவில் 100 சதவீதம் இணைக்க வாய்ப்பில்லை. மனிதாபிமானம் அடிப்படையில் சசிகலா நலம் பெற ஓபிஎஸ் மகன் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து சரியான நேரத்தில் கட்சியின் தலைமை அறிவிக்கும். பாமகவுடனான கூட்டணியில் பிரச்சனை ஏதுமில்லை, எனக் கூறினார்.

Views: - 17

0

0