அடிப்படை வசதிகளை மக்கள் கேட்கின்றனர்.. அதை குற்றச்சாட்டாக கூறக்கூடாது : அமைச்சர் கே.என்.நேரு பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 10:01 pm
Minister KN Nehru - Updatenews360
Quick Share

விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் காவிரி நீர் கொண்டு வருவதற்கு ரூபாய் 6500 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உழவர் நலந்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில் பேரூராட்சியில் 200 பணிகளுக்கு 88 கோடியே 68 லட்சம் ரூபாய் பணிகள் செய்ய கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதில் செஞ்சி பேரூராட்சிக்கு 15 கோடியே 93 லட்சமும் வளவனூர் பேரூராட்சிக்கு நாலு கோடியே 19 லட்சமும் விக்கிரவாண்டி பேரூராட்சி 6 கோடியே 8 லட்சம் ரூபாயும் மரக்காணம் பேரூராட்சிக்கு 33 கோடியே 57 லட்சமும் அதே போல விழுப்புரம் நகராட்சிக்கு 19 கோடியே 95 லட்சமும் திண்டிவனம் நகராட்சிக்கு 30 கோடியே 16 லட்சம் ரூபாய் கோட்டகுப்பம் நகராட்சிக்கு 23 கோடியே 84 லட்சம் கேட்டுள்ளதாகவும் மொத்தம் 73 கோடியே 95 லட்சம் ரூபாய் கேட்டுள்ளதாககவும் முதலமைச்சரின் அனுமதி பெற்று இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும் படிப்படியாக அனைத்து பணிகளும் செய்யப்படும் என்றும் மாநகராட்சி தரம் உயர்த்துவதற்கு 5 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை மக்கள் தொகை இருக்குமானால் அதைப்பற்றி சிந்திக்கலாம் அதுவும் முதலமைச்சர் அனுமதி பெற்று அதனை பார்ப்பதாக கூறினார் மேலும் 6500 கோடி செலவில் வேலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பகுதியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு பகுதியும் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்திற்கும் காவிரி நீர் கொண்டு வருவதற்கு உலக வங்கி ஜெர்மன் வங்கிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் விரைவில் அந்த வேலை ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்று கேட்டதற்கு அது குற்றச்சாட்டு அல்ல வேண்டுகோள் அதை ஏன் குற்றச்சாட்டு என்று கூறுகிறீர்கள்.

ஒரு இடத்தில் இருந்து தூரத்தில் இருக்கும் வீட்டிற்காக பைப் லைன் அமைப்பது சிரமம் என்றும் பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது.

எனவே இது குற்றச்சாட்டு அல்ல வேண்டுகோள் என கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இந்த அரசு திறமையற்ற அரசு என்று கூறுகிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு முதலில் அவர் திறனாய் இருக்கிறாரா என்று பார்க்கச் சொல்லுங்கள் என்று கூறினார்.

Views: - 365

0

0