சீமான் ஒரு அரைவேக்காடு, அண்ணாமலை ஐபிஎஸ் படிச்சாரானு தெரியல : அமைச்சர் விளாசல்!!

By: Udayachandran
24 December 2020, 4:41 pm
Minister kadamboor-Updatenews360
Quick Share

தூத்துக்குடி : நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயராக இருக்கிறேனன், நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயராக இருக்கிறா என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணாபஸ் நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் எம்.ஜி.ஆர் நினைவு நாளையெட்டி மொட்டை போட்ட அதிமுக தொண்டர்களுக்கு வேஷ்டி,சட்டை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் எம்.ஜி.ஆரை பழித்து பேசிய எவரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை, எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்.

சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்.ஜி.ஆர் பற்றி பேச அருகதை இல்லை, தரத்துடன் பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். நாட்டில் இருக்கிறதை காட்டி கொள்வதற்காக ரகளை பண்ணுவதற்காக வாய்க்கு வந்தபடி பேசுபவருக்கு முறையாக இருக்காது.

அண்ணாமலை ஐபிஎஸ் படித்தாரா என்று தெரியவில்லை, மத்தியரசு விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் வழங்குகிறார்கள், அவர்கள் எதில் இருந்து கொடுக்கிறார்கள், அரசு திட்டங்களுக்கு அரசு நிதியில் இருந்து தான் கொடுக்க வேண்டும், இதை தவறாக சித்தரிக்கும் அண்ணாமலை என்ன அளவுகோலில் பேசுகிறார் என்று தெரியவில்லை, சாதரண பாமரமக்களுக்கு தெரியும் விஷயம் கூட அவருக்கு தெரியவில்லை என்று கூறினார்.

நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார், நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயரா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், மனசாட்சிபடி நடிகர் கமலஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும், நாங்களும் சொல்ல தயராக இருக்கிறோம், கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரைத்துரையினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து உள்ளது.

திரைத்துரையினர் வைத்த கோரிக்கைளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் இடம் பெறுவதற்கு தமிழக அரசு உதவி செய்துள்ளது. ஹாலிவுட் அளவிற்கு தமிழ் திரைப்படத்துறை வளர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

Views: - 43

0

0