ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு : எதுக்கு தெரியுமா?

29 January 2021, 4:22 pm
Kadambur Raju Thx To Stalin - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : மு.க.ஸ்டாலினின் உங்கள் தொகுதி நல்ல தலைப்பு என்றும்,இதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலமாக தனியார் வேவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள. ,திரைப்படம் திரையிடுவதற்கு தடை வந்தால் அரசு உதவி செய்யும் என்றும், திரைப்படத்துறை சிறப்பாக செயல்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திரைப்பட துறைக்கு பக்கபலமாக இருக்கின்ற அரசாக அதிமுக உள்ளது.ஓடிடி பிரச்சினை தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து பேசி சமரசம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கோவிட் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இந்தியாவில் தமிழக முதல்வர் மட்டும் தான், தமிழகத்தில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டு வருகிறது .அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர் என்ற முறையில் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளார். இதற்கு அடுத்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி எடுக்கும் போது மக்களிடம் விழிப்புணர்வு வரும் என்றும், கொரோனா புதிய நோய் என்பதால் மக்களிடம் ஒரு அச்ச உணர்வு இருப்பது இயற்கை என்றும், அரசு இலவசமாக வழங்குவதால் விரைவில் தமிழகத்தில் தான் அதிகளவில் மக்கள் கோவிட் தடுப்பூசி எடுத்து கொள்வார்கள் என்று கூறினார்.

உங்க தொகுதி என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அதிமுக தொகுதி தான், தேர்தல் முடிவு தற்போதே தெரிந்த காரணத்தினால் தான் மு.க.ஸ்டாலின் எங்கள் தொகுதி (திமுக) என்று கூறாமல், உங்கள் தொகுதி (அதிமுக) என்று கூறுகிறார். திமுக கிராம சபை கூட்டம் மூலமாக அடிப்படை வசதிகள் இல்லை என்றனர். ஆனால் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை இல்லை என்றும், திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் இருண்ட தமிழகமாக இருந்தது.திமுக ஆட்சிக்காலத்தில் மின் வயரில் துணியை காய போடும் நிலை இருந்தது. இதனால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின் தங்கியது என்றும், அதிமுக 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை என்றும், இதெல்லாம் திமுக ஆட்சியில் இருந்தது. இது மக்களுக்கு தெரியும். மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதி என்று நல்ல டைட்டில் (தலைப்பு) கொடுத்துள்ளார் என்றும், அதற்கு நன்றி என்றார்..

Views: - 0

0

0