கொரோனாவால் பாதித்த அமைச்சருக்கு தீவிர சிகிச்சை : இபிஎஸ், ஓபிஎஸ் மருத்துவமனைக்கு நேரில் விசிட்

20 January 2021, 9:35 am
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 6ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு நேற்று மாலை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். அங்கு அமைச்சருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

Views: - 8

0

0