”மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்” : சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் கண்ணீர்!!!

27 February 2021, 1:04 pm
Minister kamaraj -Updatenews360
Quick Share

சென்னை : மறுபடியும் உயிருடன் பிழைத்து வருவேனா என தெரியாமல் இருந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க பேசினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சைக்கு பிறது அவருடைய உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்தது பின்னர் முழுமையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தார். நுரையீரல் தொற்று பாதிக்கப்பட்ட அமைச்சர் மீண்டு வந்தது மருத்துவ வரலாற்றில் அதிசயம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

https://www.vikatan.com/oddities/miscellaneous/5992-oblivion-is-the-nature-of-the-people  https://images.assettype.com/vikatan/2019-05/4a2c85aa-bcab-4035-9ce8-a37302d22aa7/174860.jpg  https://images.assettype.com/vikatan/2019-05/a8f3b674-9d03 ...

எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் அவ்வப்போது கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் முழுமையாக மீண்டு வந்த அமைச்சர் காமராஜ், இன்று சட்டப்பேரவையில் கண்ணீர் மல்க பேசினார். மீண்டும் உயிருடன் வருவேனா என சந்தேகம் எழுந்தது, ஆனால் தற்போது மறுபிறவி எடுத்து வந்துள்ளேன், இதற்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக கண்ணீருடன் பேசினார்.

Views: - 8

0

0