கன்னியாகுமரி ; குஷ்பு குறித்து திமுக பேச்சாளர் அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே வெட்டுவந்தியில் மக்கள் தீர்வுதளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது :- திமுக பேச்சாளர் பேசிய விவகாரத்தில் திமுக கட்சி சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. பெண்ணியத்தை ஒருபோதும், திமுக அவதூறாக பேசாது. அப்படி பேசிய பேச்சாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மேடையில் தான் சிரித்திருப்பதாக கூறியது அப்பட்டமான பொய். பாஜகவிற்கு வேறு விவகாரங்கள் கிடைக்காததால் அதை பெரிதாக்க நினைக்கிறார்கள்.
கோவை கார் வெடிப்பை பொறுத்தவரையில் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. இதை அரசியலாக முயல்கிறார்கள். தீவிரவாதத்தை ஒருபோதும் திமுக ஏற்றுக்கொள்ளாது. 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ் இவர்களின் தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் எடுத்து கூறவேண்டிய கடமை திமுகவிற்கு உள்ளது.
ஐஎஸ்ஐஸ்ஐ தீவிரவாத உட்பட எந்த தீவிரவாதமாக இருந்தாலும், இரும்பு கரங்கொண்டு முதல்வர் தீவிரவாதத்தை அடுக்குவார் குமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளார். இது பற்றி பொது விவாதத்திற்கு எப்போதும் தயார் அதற்கான இடத்தைமும், நேரத்தையும் அவர்கள் தெரிவிக்கட்டும்.
அரசு அதிகாரிகள் திமுகவிற்கு ஒத்துழைக்கவில்லை என்று அமைச்சர் நேரு கூறியிருப்பதை பொறுத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளில் அலட்சியமாக இருந்த அரசு அதிகாரிகளை சீய் செய்வது குறித்து சுட்டிகாட்டியுள்ளார். ஆளுநர் ஒரு தவறாக வழிகாட்டுதலை பின்பற்றி வருவதாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, தெலுங்கனா உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆளுநர்களை மாநில அரசுக்கு உதவ அனுப்பியுள்ளார்களா..? அல்லது குழப்பத்தை ஏற்படுத்த அனுப்பியுள்ளார்களா..? ஆளுநர்களின் செயல்பாடு பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு விதமாகவும் எதிர்கட்சிகளள் ஆளும் மாநிலங்களில் ஒருவிதமாகவும், மாற்றாந்தாய் மனபான்மையுடன் உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை குரங்கு என விமர்சித்ததை பொறுத்தவரையில், பத்திரிக்கையாளர்கள் இது குறித்து வருத்தப்பட வேண்டாம். ஒருவர் தன்னை வைத்துதான் மற்றவர்களை ஒப்பிடுவார்கள். அவரும் தன்னைதானே குரங்கு என கூறியிருக்கிறார், என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.