கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு : சுற்றுச்சூழல் மாசு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை!!

2 July 2021, 3:11 pm
Minister Meyyanathan - Updatenews360
Quick Share

கோவை : கோவை நேரு ஸ்டேடியத்தை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு நடத்தினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று கோவை வருகை தந்தார். அவர் கோவை நேரு விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்தார்.

47 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்ட நேரு உள் விளையாட்டு அரங்கை பார்வை செய்தார். பிறகு அவரை விளையாட்டு துறை மாவட்ட அதிகாரி ரவிச்சந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து அங்கு இருந்த தடகள வீரர்-வீராங்கனைகளுடன் கலந்து ஆலோசித்தார். அவர்களுடைய தேவைகள் மற்றும் குறைகளையும் கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு கஷ்டப்படக் கூடிய ஏழை எளிய விளையாட்டு மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து அரிசி, விளையாட்டு ஆடைகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் தென்மேற்கு பருவமழை, நீர்நிலைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாசு கட்டுப்பாடு மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 121

0

0