இனிவரும் காலங்களில் மதுரையில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை: மதுரையில் நேற்று (அக்.25) பிற்பகல் முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கண்மாய் பெருகி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியரிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவும் அவர் அறிவுறுத்தினார்.
இதன்படி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மதுரை மாவட்டத்திலே பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய சேதங்களை உடனடியாக பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரவு பிறப்பித்தார். நான் அதற்கு முன்னதாகவே மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
இப்போது பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. பந்தல்குடி கால்வாய் தண்ணீர் என்பது, வழக்கத்தை விட அதிகமாக வருவதன் காரணத்தால், அந்த தண்ணீர் வைகை ஆற்றில் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 3 டிரான்ஸ்பார்மர்களை அகற்றும் பணியும் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக, விவசாயத்திற்காக உள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி, மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது.
எப்போதும் உள்ள நீர்வரத்து, கண்மாய் தண்ணீர் வரக்கூடிய தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால், குடியிருப்பு பகுதியில் ஒரு சில இடங்களில் கால் பகுதியில் தண்ணீர் சென்றுள்ளது. காலைக்குள் தண்ணீர் அகற்றப்படும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கனமழை வந்தாலும் இனி தாக்குப் பிடிக்கும் அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது. செல்லூர், பந்தடி அல் அமீன் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : கால் மணிநேரத்தில் மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வரலாற்று மழைப்பதிவு!
ஆனால், முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பார்த்தாச்சு. எதிர்பார்த்த சேதாரம் இல்லை, பெரிய சேதாரம் இல்லை. ஆனாலும் கூட, இனிவரும் காலங்களில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.