தமிழகம்

இமேஜை டேமேஜ் செய்ய அமலாக்கத்துறை முயற்சி : அமைச்சர் நேரு குற்றச்சாட்டு!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க: திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற வேண்டும் : நயினார் நாகேந்திரன் விருப்பம்!!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்த கேள்விக்கு, அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு எல்லாரையும் மிரட்டுகிறார்கள். நீதிமன்றத்தில் தடையானையை வாங்கி இருக்கிறோம். என்ன நீதியோ அதை நீதிமன்றத்தில் கிடைக்கப்போகிறது. குற்றச்சாட்டை உற்பத்தி செய்து அமலாக்கத்துறையை வைத்து இமேஜை குறைக்க பார்க்கிறார்கள். நீதிமன்றம் நியாயத்தை வழங்கியிருக்கிறது.

புதுக்கோட்டையில் திமுக நிர்வாகிகள் இடையே உட்கட்சி பூசல் குறித்த கேள்விக்கு, கட்சியில் சிறிய சிறிய பிரச்சனைகள் இருக்கும். அதை தலைமை செயலகத்தில் கூறி சரி செய்து கொள்வோம்.

கடந்த முறை போலவே இந்த முறையும் டெல்டா முழுவதும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. யார் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் டெல்டா முழுவதும் திமுக தான் வெற்றி பெறும்.

ஜூன் 14ம் தேதிக்கு பிறகு பஞ்சப்பூர் பேருந்து நிலையம் இயங்க தொடங்கிவிடும். எங்கெங்கு தண்ணீர் தேங்குகிறதோ அங்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நகராட்சி,மாநகராட்சி இணைந்து பணியாற்றி வருகிறோம்.

முசிறி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் சோதனை நடைபெற்று வருகிறது, விரைவில் முசிறி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும்.

காற்று அதிகமாக வீசுவதால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அது வழக்கம்தான். அதனை உடனடியாக சரி செய்ய முயற்சித்து வருகிறோம்.

அடுத்த முதல்வர் விஜய் என்று மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கொடுத்த கேள்விக்கு, 500 ரூபாய் இருந்தால் போஸ்டர் ஒட்டலாம் மக்கள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அரசு கொடுத்த வேலை 80 கிமீ தூரம்.. தண்ணி இல்லாத காட்டுக்குள் வீடு : அஜித் குமார் சகோதரர் அதிருப்தி!

தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.…

24 minutes ago

மன்சூர் அலிகான் இயக்கும் முழு நீள சமஸ்கிருத திரைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?

முழுக்க முழுக்க சமஸ்கிருத மொழியில் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறியுள்ளார் மன்சூர் அலிகான் மன்சூர் அலிகானின் புதிய…

35 minutes ago

புகார் அளித்து 4 நாள் ஆச்சு.. அண்ணாமலைக்கு ஆதரவாக மீண்டும் ஆதரவாளர் ராஜினி கோரிக்கை!

திருவள்ளூர் பொன்னேரி பாஜக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜினி காவல் நிலையத்தில் கடந்த நான்காம் தேதி நிகிதா என…

1 hour ago

3 கிலோ கஞ்சாவுடன் சென்னை திரும்பிய இளைஞர் கொலை வழக்கு : பரபரப்பு திருப்பம்..!!

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரி - ஜோதி தம்பதி. இவர்களின் இரண்டாவது மகன் அஜய், கல்…

2 hours ago

வாழ்க்கைனா என்னனு தெரியணுமா? இந்த படத்தை பாருங்க- நயன்தாராவே தூக்கி கொண்டாடும் திரைப்படம்?

நடிகை நயன்தாரா சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.  அது என்ன திரைப்படம் என்பதையும் அவர்…

3 hours ago

தமிழகத்தில் நாளை ஆட்டோ, பேருந்துகள் ஓடாது : நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிப்பு!

நாடு முழுவதும் நாளை ஆட்டோ மற்றும் பேருந்துகளை சேவைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விலைவாசி உயாவு உள்ளட்ட 17…

4 hours ago

This website uses cookies.