தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்..!!

Author: Babu Lakshmanan
28 June 2021, 4:36 pm
ptr - updatenews360
Quick Share

மதுரை : தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கொரோனாவை தடுப்பூசியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டதால், முககவசம் அணிய தேவையில்லாத சூழல் உருவாகி உள்ளது. மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு குளறுபடி செய்துள்ளது.

மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு திணறி வருகிறது. தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஒரு மாதத்திற்கு உள்ளாக பல்வேறு வழிகளில் தமிழகத்திற்கு தடுப்பூசி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிய ஆய்வு நடத்தப்பட உள்ளது, என கூறினார்

Views: - 303

0

0